பாலக்கோடு, மே 23 –
இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் வக்கில் கோபால் தலைமையிலான குழுவினர், “நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும், இது பல்லாண்டு” என்ற தலைப்பில், தமிழகத்தில் திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புத்தகங்களை ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்டஅள்ளி, அனுமந்தபுரம், பிக்கனஅள்ளி ஆகிய ஊராட்சிகளின் பொதுமக்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கில் சந்திரசேகர், முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் தனகோட்டி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத், மாவட்ட ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் சக்தி, ஒன்றிய அவைத் தலைவர் முனுசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் சுமதி கோவிந்தன், ராஜாமணி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மேலும், அணிகளின் அமைப்பாளர்களாக சிதம்பரம், முனிராஜ், சண்முகம், பாக்கியராஜ், முனிரத்தினம், கணேசன், விஜய், சாதிக், புருஷோத்தமன், போத்தராஜ், சக்தி, மாறன் உள்ளிட்ட பலர் சிறப்பாக செயல்பட்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி ஊரக பொதுமக்களிடம் தமிழக அரசின் சாதனைகளை நேரடியாக விளக்கும் ஒரு முயற்சியாகவும், திமுகவின் செயற்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையாகவும் அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக