முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வி ஊக்கத்தொகை – விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 மே, 2025

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வி ஊக்கத்தொகை – விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை.


தருமபுரி, மே 20 –

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முப்படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு, இந்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், IITs, IIMs மற்றும் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுக்கு ரூ.50,000/- ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.


இந்த திட்டத்தின் பயன்கள், 2022–2023 கல்வியாண்டிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் அடிப்படையில், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கடந்த கல்வியாண்டில் மேலாண்மை, பொறியியல் மற்றும் சட்டத் துறையில் உயர் கல்வி பயின்றிருந்தால், இத்தொகைக்குத் தகுதியானவர்களாக பரிசீலிக்கப்படுவர். இதற்கான தகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டால், அந்த மாணவர்கள் இச்சலுகையை பெற விண்ணப்பிக்கலாம்.


தற்போது இந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்று வரும் மாணவர்களும், கடந்த ஆண்டு வாய்ப்பு இல்லாமல் தவறிய மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தெரிந்துகொள்வதற்கும், விண்ணப்பிக்க தேவையான உதவிகளுக்காகவும், தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம். நேரில் வர முடியாதவர்கள் அலுவலக தொலைபேசி எண் 04342–297844 மூலம் தொடர்பு கொண்டு வழிகாட்டல் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad