தருமபுரி, மே 19 –
இந்நிலையில், சில நில ஆவணங்களில், இறந்த நில உரிமையாளர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும், அதற்குப் பதிலாக அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது தற்போதைய உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளதை அரசு கவனித்துள்ளது.
இதனையடுத்து, பட்டா மற்றும் நில உரிமை தொடர்பான பதிவுகளை புதுப்பிக்க, பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் அல்லது Citizen Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.
விண்ணப்பத்தில் இணைக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்:
🔸 வாரிசுதாரர்கள் விண்ணப்பிக்கும் போது:
-
இறப்புச் சான்று
-
வாரிசுச் சான்று
-
ஏதேனும் வாரிசு இறந்திருந்தால், அவரது இறப்புச் சான்றும் வாரிசுச் சான்றும்
-
நிலம் தொடர்பான வில்லங்கச் சான்றிதழ்
-
பதிவு செய்யப்பட்ட பாக் பிரிவினை/தானசெட்டில்மெண்ட் ஆவண நகல்
-
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உரிமை கோரப்படும் நிலையில், தீர்ப்பு நகல்
🔸 கிரையம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கும் போது:
-
இறப்புச் சான்று
-
வாரிசுச் சான்று
-
அவசியமானிருந்தால், இறந்த வாரிசுகளின் சான்றுகள்
-
வில்லங்கச் சான்றிதழ்
-
பதிவு செய்யப்பட்ட கிரைய ஆவண நகல்
விண்ணப்பிக்கப்படும் விவரங்கள் ஜமாபந்தி பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்பட்டு, உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு நில ஆவணங்களில் பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நில உரிமை பதிவுகளைப் புதுப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக