மொரப்பூர் ரயில் நிலையம் செல்லும் வழியில் குப்பை மேடுகள் – சுகாதார பாதுகாப்புக்கு சவால் என பொதுமக்கள் வேதனை!. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 மே, 2025

மொரப்பூர் ரயில் நிலையம் செல்லும் வழியில் குப்பை மேடுகள் – சுகாதார பாதுகாப்புக்கு சவால் என பொதுமக்கள் வேதனை!.


மொரப்பூர் பகுதியில், ரயில் நிலையம் செல்லும் முக்கிய சாலையின் அருகாமையில் குப்பைகள் அதிகமாக கிடப்பதால், அந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


ரயில்வே காம்பவுண்ட் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் குப்பைகளால் முற்றிலும் அடைத்துப் போன நிலையில், சாக்கடைகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கும் தும்மல், சளி, தலைவலி, தொண்டை எரிச்சல் போன்ற தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.


இந்நிலையை கண்டித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில்,

“கழிவுகளைத் முறையாக அகற்றாமல் பொதுமக்கள் சாலைகளில் போடுவதும், சுகாதார துறை இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இருக்கும் நிலையும் இவ்வாறான நிலைக்கு வழிவகுக்கிறது. மாவட்ட சுகாதாரத்துறை, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து இப்பிரச்சனையை விரைவாகத் தீர்க்க வேண்டும். இல்லையெனில் ஒரு பெரிய சுகாதாரச் சிக்கலாக இது உருவாகும்,” எனக் கூறினர்.


தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad