பாலக்கோடு, மே 14 –
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மைதீன் நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக இரண்டு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், தலா ₹25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நந்தகோபால், சப்-இன்ஸ்பெக்டர் கோகுல் தலைமையிலான குழுவினர் போலீசாருடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது, மைதீன் நகரில் உள்ள இரண்டு பெட்டிக்கடைகளில் ஹான்ஸ், தூலிப் உள்ளிட்ட 1500 கிராம் அளவிலான குட்கா வகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இரு கடை உரிமையாளர்களுக்கும் தலா ₹25,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அக்கடைகளுக்கு அதிகாரப்பூர்வமாக சீல் வைக்கப்பட்டது. போன்ற விதிமீறல்களை கட்டுப்படுத்த தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.