பாலக்கோடு, மே 12.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுசெயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் 71வது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நகரச் செயலாளர் ராஜாவின் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் முன்னாள் அமைச்சர் மற்றும் தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பேருந்து நிலையம் முன்பிலுள்ள பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, அன்னதானம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய மற்றும் நகர கழக நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், கவுன்சிலர்கள், இளைஞரணி, ஐடி விங்க் உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக