தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசௌடேஸ்வரி ஸ்ரீ ஜடையப்பர் நாதர் கோயிலில் சித்திரை பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஆடியத்தொனியில் நடைபெற்றன. இந்த புனித நாளில் பெரும்பாலான பெண்கள் விரதம் இருந்து, சித்திர குப்தனை போன்று மாக்கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து, விளக்கேற்றி பூஜை செய்து, பொங்கல் வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அதேபோல, சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், நெய், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து முழுமனதுடன் வழிபாடுகளில் ஈடுபட்டனர். நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று அருள் பெற்றுக்கொண்டனர், பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு விழா நிறைவுற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக