
தருமபுரி, மே 20 –
தற்போது கிருஷ்ணகிரி அணையில் 1513.38 மில்லியன் கனஅடி அளவிலான நீர் இருப்பில் உள்ளது. நீர்மட்டம் 506.5 அடியாக பதிவாகியுள்ளது. அணையின் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், மேலும் நீர் வரத்துடன், அதை சமன்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் வெளியேற்றம் நடைபெறும். இதனால், கிருஷ்ணகிரி அணை முதல் சாத்தனூர் அணை வரை தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும்.
பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துகளின் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆற்றங்கரையில் சுற்றுலா மற்றும் வாகனங்களை தவிர்க்குமாறும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு ச. தினேஷ்குமார், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக