பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா – சாட்டை, வேப்பிலை வீட்டிற்கு வங்கி செல்லும் வினோதம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 மே, 2025

பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா – சாட்டை, வேப்பிலை வீட்டிற்கு வங்கி செல்லும் வினோதம்.


பாலக்கோடு, மே 14:

பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ அக்குமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்புடன் வண்ணமயமாக நடைபெற்றது. முன்னதாக மே 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியதிலிருந்து, கோவிலில் அற்புதமான ஆன்மீக சூழ்நிலை நிலவியது. நேற்று அதிகாலை அம்மனுக்கு பால், தேன், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து சோமனஅள்ளி மற்றும் சுற்றுவட்டார 12 கிராம மக்கள் இணைந்து, குழு ஊற்றுதல், மாவிளக்கு ஊர்வலம், பூங்கரம் எடுத்தல் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பக்தர்கள் அலகு குத்துதல், பால்குடம் எடுத்து வருதல், சாமி வேடங்கள், ஆடு, கோழி, கிடா போன்றவைகளை பலி செலுத்துதல் என பல்வேறு வழிபாட்டு முறைகளில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில், சுமார் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாட்டை அடியை ஆன்மிக சமர்ப்பணமாக வாங்கியதுடன், கோவிலில் பயன்படுத்தப்பட்ட வேப்பிலை சாட்டையை வீட்டிற்கு சுமந்து செல்லும் வினோத ஆன்மிக அச்சமய வழிபாடும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. விழாவின்போது ஊரினரால் ஏற்பாடாக அன்னதானம், நீர்மோர் விநியோகம் சிறப்பாக செய்யப்பட்டது. இவ்விழாவின் ஒட்டுமொத்த ஏற்பாடுகளை சோமனஅள்ளி கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் திட்டமிட்டு நிர்வகித்தனர். வழிகாட்டும் பணியில் கிராமத்தினர் தொண்டுடன் செயல்பட்டதை பக்தர்கள் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad