Type Here to Get Search Results !

மூக்கம்பட்டியில் நிலத்தகராறு: மோட்டார் அறை இடிப்பு – பெண் மீது கொடூர தாக்குதல்; பாதுகாப்பு கோரி புகார்.


பாலக்கோடு, மே 17:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மூக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜம்பேரி மற்றும் அவரது மனைவி பெருமா (39) குடும்பத்துடன் தங்களுக்குப் பாகமாக கிடைத்த ஒரு அக்கர் விவசாய நிலத்தில் குடியிருந்து விவசாயம் செய்து வந்துள்ளனர்.


இந்நிலையில், ஜம்பேரியின் சித்தப்பா மகன் பழனி தொடர்ந்து நிலத்தை திருப்பி தர வேண்டும் எனக் கோரி, வீட்டை காலி செய்ய வற்புறுத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், பழனி மற்றும் அவரது மகன் மணிகண்டன், ஜம்பேரி வீட்டின் பாதுகாப்பு கம்பி வேலியை உடைத்து, ஜன்னல்களில் கற்கள் வீசி சேதம் செய்ததோடு, வீட்டைச் சுற்றி குழி தோண்டு முடக்கமும் செய்துள்ளனர். மேலும், கிணற்றில் நீர் எடுக்க பயன்படுத்தப்படும் மோட்டார் அறையை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.


இவற்றை எதிர்த்த ஜம்பேரியை, பழனி மற்றும் மணிகண்டன் இருவரும் கொடுவாளால் தாக்கியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற அவரது மனைவி பெருமா மீது பிளேடால் கழுத்தில் குத்த முயன்றுள்ளனர். துடைத்தபோது அவரது கைகளில் ஆழமான வெட்டங்கள் ஏற்பட்டு, ரத்தம் கசிய அவதிப்பட்டுள்ளார். அப்பகுதி மக்களின் உதவியால் பெருமா பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, ஜம்பேரியின் மகள் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, ஆரம்பத்தில் போலீசார் புகாரை பெற மறுத்ததாகவும், பெருமளவான தாழ்த்தியிருக்கும் பின்னரே புகார் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததாகவும், பழனியால் குடும்பத்திற்கு உயிர்க்கும் ஆபத்து இருப்பதாகவும் குற்றம்சாட்டிய ஜம்பேரி குடும்பம், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனு அளித்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies