மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலை கழிவுநீர் கால்வாய் மற்றும் குடிநீர் பைப் லைன் அமைக்க பூமி பூஜை . - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 மே, 2025

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமென்ட் சாலை கழிவுநீர் கால்வாய் மற்றும் குடிநீர் பைப் லைன் அமைக்க பூமி பூஜை .


பாலக்கோடு‌, மே 22-

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பேருராட்சிக்குட்பட்ட  பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் மற்றும் குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணிக்கு  பூமி பூஜை நிகழ்ச்சி  மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா முன்னிலை வகித்தார்.


மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 15வது வார்டு அம்பேத்கர் நகரில்  15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் கழிவுநீர் கால்வாய் மற்றும் புதிய சிமென்ட் சாலை அமைக்கவும்,  சின்னாற்று படுகை தரைமட்ட தொட்டியில் இருந்து பேருந்து நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வரை 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் பைப் லைன் அமைக்கவும் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் தலைமை எழுத்தர் சம்பத்,  கவுன்சிலர்கள் அலுவலக ஊழியர்கள், ஒப்பந்ததாரர் இளஞ்சூரியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad