தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் தேவாரம், சரவணன் உள்ளிட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது மாரண்டஅள்ளி அடுத்த ஆல்மாரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் பாலிதீன் பையுடன் நின்று கொண்டிருந்தவர், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார், போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்ததில், ஒன்னறை கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது,
அதனை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்ததில் மாரண்டஅள்ளி மாரப்பன் நகரை சேர்ந்த சக்திவேல் (34) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது, அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக