பாலக்கோடு, மே 13:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கடைத்தெருவில் குடியிருந்து வருபவர் சரவணன் (47) இவர் அதே பகுதியில் மளிகை கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அதே பகுதியில் இரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருபவர் செந்தில் (45) இவர் தர்மபுரி அரசு கல்லூரி மருத்துவமணையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.
இருவரும் நண்பர்கள், இவர்கள் இருவரும் கடந்த 10 வருடத்திற்க்கு முன்பு கூட்டாக தொழில் செய்து வந்தனர். செந்தில் வரவு - செலவு கணக்குகளை கவனித்து வந்தார். செந்தில் வரவு - செலவு கணக்குகளில் முறைகேடு செய்ததாக கூறி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். அதனை தொடர்ந்து ஆடிட்டர் மூலம் வரவு - செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில் செந்தில் சுமார் 4 கோடி ரூபாய் வரை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் 2.5 கோடி ரூபாய் திருப்பி தருவதாக செந்தில் ஒப்புக் கொண்டு முன்பனமாக 10 இலட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், மீதி பணம் 3 மாத கால இடைவெளியில் திருப்பி தருவதாகவும் ஒப்புக் கொண்டவர் காலக்கெடு முடிந்தும் பணத்தை திருப்பி தராததால் சரவணன் பல முறை கேட்டுள்ளார்.
பணம் தர மறுத்ததால் இன்று காலை 8 மணிக்கு செந்தில் நடத்தும் ஓட்டல் முன் அமர்ந்து பணத்தை கொடுத்து விட்டு ஓட்டலை திற என கூறி தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பாலக்கோடு டி.எஸ்.பி.மனோகரன், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு சென்று போக்குவரத்தை சீர்செய்து கடையை திறக்க ஏற்பாடு செய்தனர்.
மேலும் இருவரையும் காவல்நிலையத்திற்க்கு அழைத்து சென்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்க்கும் இடையூறு இல்லாமல் பணப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக