பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தியில் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 மே, 2025

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தியில் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.


பாலக்கோடு, மே 21- 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில், பாலக்கோடு பிரகாவிற்கு உட்பட்ட பசலி 1434-ம் வருவாய் தீர்வாயம், ஜமாபந்தி நிகழ்ச்சி மே 22ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு. சரவணன் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்வின் போது, பாலக்கோடு, எர்ரனஅள்ளி, ஜெர்தலாவ், தண்டுகாரணஅள்ளி, பெலமாரனஅள்ளி, பேவு அள்ளி, கரகத அள்ளி உள்ளிட்ட 14 வருவாய் கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பட்டா மாறுதல், நில அளவை, புதிய ரேஷன் கார்டு பெறுதல், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களை நேரில் பெற்றுக்கொண்ட உதவி ஆட்சியரின் உதவியாளர், மனுக்களின் நிலையை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.


மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரித்து வரும் நில விவர பதிவேடுகள், நில அளவுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் வருவாய்த்துறையின் ஆவணங்களும் இந்த நிகழ்வில் பரிசோதிக்கப்பட்டன. நிகழ்ச்சியில், பாலக்கோடு தாசில்தார் திருமதி ரஜினி, துணை தாசில்தார் திரு. ஜெகதீசன், கிராம நிர்வாக அலுவலர்கள் திரு. சாம்ராஜ், திரு. மாதேஷ், வட்ட வழங்கல் அலுவலர், நில அளவையர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு முக்கிய பங்கு வகித்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad