Type Here to Get Search Results !

நிலம் இருக்கா? உரிய பதிவு இல்லையா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!


தருமபுரி மாவட்ட விவசாயிகள் கவனிக்க வேண்டிய முக்கியமான அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., வெளியிட்டுள்ளார். பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 வீதம், வருடத்திற்கு மொத்தம் ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிதி தொடர்ந்து பெற, விவசாயிகள் தவறாமல் கீழ்கண்ட பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அவசியம்.


தற்போது 20வது தவணை நிதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், eKYC பதிவு, வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு, மற்றும் வேளாண் அடுக்கு திட்டத்தில் நில உடைமை விவரங்களை பதிவு செய்தால்தான் ஊக்கத்தொகை தொடர்ந்து வழங்கப்படும். இப்போதும் தருமபுரி மாவட்டத்தில் eKYC செய்து முடித்த 1,00,930 விவசாயிகளில் 76,602 பேர் மட்டுமே நில பதிவுகளை செய்துள்ளனர். மீதமுள்ள 24,328 பேர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும், 1,09,646 விவசாயிகளில் 4,710 பேர் இன்னும் eKYC செய்யவில்லை என்றும், 4,080 பேர் வங்கி கணக்குடன் ஆதார் இணைத்தல் செய்யவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக 01.05.2025 முதல் 31.05.2025 வரை அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும், பொது சேவை மையங்களிலும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நில சிட்டா மற்றும் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுடன் நேரில் சென்று பதிவு செய்தால், திட்டத்தின் நன்மைகளை தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies