பாலக்கோடு,ஏப்.27-
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜி, இவரது மகள் கீர்த்தனா (18) பாலக்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 23ம் தேதி பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கீர்த்தனா உயிரிழந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக