பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உலக மலேரியா ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு தலைமையில் மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுனர் த முத்துச்சாமி,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மலேரியா நோய் பரவும் வழிமுறைகள், தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் போன்றவை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
அணை வரும் ஒன்று சேர்ந்தால் மலேரியாவை முற்றிலும் ஒழிக்க முடியும் என பேசினர். அதனை தொடர்ந்து மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமில்லா மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ பணியாளர்கள், புற நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக