தருமபுரி, ஏப்.27-
தருமபுரி மாவட்டம் விருப்பாட்சிபுரம் திட்டப் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் விற்பனை செய்யப்பட்ட வீட்டுமனைகளை கிரயம் பெற்ற உரிமையாளர்கள், இந்நாள் வரை பட்டா மாற்றம் செய்து கொள்ளாமல் வாரியம் பெயரிலேயே வைத்திருப்பதை தொடர்ந்து, இவ்விடம் பட்டா மாற்றம் செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள கிரய பத்திரம், வில்லங்க சான்று மற்றும் தேவையான ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மனு செய்து, பட்டா மாற்றம் செய்து பயன் பெறலாம். இந்த சிறப்பு முகாம் வரும் 27.04.2025 அன்று வெண்ணாம்பட்டி A.R. திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. விருப்பாட்சிபுரம் திட்டப் பகுதியில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்று கிரயம் பெற்ற உரிமையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக