தர்மபுரி, ஏப்.27-
தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் செட்டிக்கரையில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் மெடிக்கல் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாளருமான பி. பழனியப்பன் கலந்துகொண்டு, நிர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பானங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோடீஸ்வரன், நாசர், மாநில சுற்றுச் சூழல் அணி துணை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், இளைஞரணி சார்பு அமைப்புப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக