பாலக்கோடு, ஏப்ரல் 27:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், தங்கள் முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தனி வட்டாட்சியர் சேதுலிங்கம் தலைமையாற்றினார். துணை தாசில்தார் ஜெகதீசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சாம்ராஜ் மற்றும் மாதேஷ் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைத்தனர்:
- வருவாய் துறை ஊழியர்களுக்கான சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் உடனே நிறைவேற்றப்பட வேண்டும்.
- காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- அதீத பணி நெருக்கடிகளை தவிர்க்க வேண்டும்.
- மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும்.
- கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் 25% இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்.
- கிராம உதவியாளர்களுக்கான கருணை அடிப்படையிலான பணி நியமணத்தை மீண்டும் வழங்க வேண்டும்.
- தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும்.
இந்த வெளிநடப்பு ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் கலந்துகொண்டு, பல்வேறு கோரிக்கைகளை முழக்கங்களுடன் வலியுறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக