தருமபுரி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், "பெண் குழந்தைகளை கற்பிப்போம், பாதுகாப்போம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். சதீஷ் கலந்து கொண்டு, பெண் குழந்தைகள் உருவ முகமூடி அணிந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆட்சியர் சதீஷ் வழங்கினார்.
"பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுப்போம்", "இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்", "கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக