பென்னாகரம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஏப்ரல், 2025

பென்னாகரம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


பென்னாகரம், ஏப்ரல் 27:

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியின் தலைமையில், பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.

இந்த பேரணிக்கு பேரூராட்சி தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கணேஷ் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


பேரணி, பென்னாகரம் பஸ் நிலையத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்று, பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பேரணியின் போது, பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க மஞ்சப்பை (துணிச்சை பைகள்) பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.


இதனை தொடர்ந்து, 8வது வார்டில் அமைந்த ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பேரூராட்சி பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சுத்தமான சூழலை பாதுகாக்க வேண்டிய நிமித்தமாக விழிப்புணர்வு செய்தனர். இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு, பிளாஸ்டிக் ஒழிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad