தருமபுரி மாவட்டத்தில், சாலையோர வியாபாரிகளின் நலன்காக்கும் நோக்கில், எண்ணங்களின் சங்கமம் மற்றும் எம்.என்.காயத்ரி சாரிட்டிஸ் அமைப்பின் சார்பில் பெரிய குடைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
வெயிலின் தாக்கத்தில் வியாபாரம் செய்யும் வயதானோர், காய்கறி வியாபாரிகள் மற்றும் தண்ணீர் பந்தல் அமைப்பவர்கள் ஆகியோருக்கு இந்த பெரிய குடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு மாமனிதன் ஜெ. பிரபாகரன் ஐயா அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில ஒருங்கிணைப்பாளர் V4U பிரகாஷ் அவர்களின் உதவியுடன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், உணவு ஒருங்கிணைப்பாளர் அருள்மணி, அமைப்பாளர்கள் கிருஷ்ணன், செந்தில் மற்றும் தன்னார்வலர் கணேஷ் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தப்பட்டது.
வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் இந்த உதவியை பெரிதும் பாராட்டினர்.

