தருமபுரி, ஏப்.27-
ஆட்சித்தலைவர் தனது உரையில், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தாய்பால் வங்கி (Milk Bank) மூலம் தாய்ப்பால் வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான குழந்தை மரணங்களில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அத்துடன், கருவில் பாலினம் கண்டறியும் தவறுகளை தடுக்கும் பொருட்டு, செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை வழங்கினார். மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், புகார் இல்லாத முறையில் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில், இந்த ஆண்டில் மாவட்டத்தில் நிகழ்ந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. மரணங்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் இத்தகைய மரணங்களை தவிர்க்க அனைத்து மருத்துவ அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், இணை இயக்குநர் நலப்பணிகள் மரு. M. சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு துறைத் தலைவர்கள், துணை இயக்குநர் (குடும்ப நலம்), முதன்மை மருத்துவ அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகளின் மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக