பாலக்கோடில் ஓய்வூதிய பணத்தை வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கருவூல அதிகாரி கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

பாலக்கோடில் ஓய்வூதிய பணத்தை வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய கருவூல அதிகாரி கைது.


பாலக்கோடு, ஏப்ரல் 29:

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஓய்வூதிய பணப்பலன்களை பெற வேண்டிய ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக, ஒரு கருவூல அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் நேரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்ராஜீ கவுண்டர் தெருவைச் சேர்ந்த கவிதா (வயது 50), சிக்கார்த்தனஅள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், கருப்பை புற்றுநோய் மற்றும் பக்கவாதம் காரணமாக விருப்ப ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப்பின், அவருக்கு ரூ.29.5 லட்சம் மதிப்பிலான பண பலன்கள் வழங்கப்பட வேண்டிய நிலையில், கல்வித்துறையின் அனுமதி கிடைத்தும், பாலக்கோடு சார்நிலை கருவூல அலுவலகத்தில் அனுமதி வழங்காமல் ஒதுக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்த ராமசந்திரன் (42) என்பவர், பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில் கூடுதல் சார்நிலை அலுவலராக பணியாற்றி வந்தார். கவிதா அவரிடம் உரிய பணப்பலன்கள் குறித்து கேட்டபோது, ரூ.10,000 லஞ்சம் தரவேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.


லஞ்சம் தர மறுத்த கவிதா, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அதன்படி, டி.எஸ்.பி நாகராஜன் தலைமையிலான குழுவினர், ரசாயன தடவிய பணத்தை வழங்க அழைத்தனர். செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில், கவிதா லஞ்சமாக ரூ.10,000 கொடுத்தபோது, மறைந்திருந்த டி.எஸ்.பி நாகராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் உடனடியாக தலையிட்டு, ராமசந்திரனை லஞ்ச பணத்துடன் கைது செய்தனர்.

இச்சம்பவம் மாவட்ட அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் தொடர்பாக மீண்டும் கவனத்தை திருப்பியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad