பாலக்கோடு, ஏப். 30:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை மீது ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், 15 நாட்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் அவர்களின் மேற்பார்வையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. சோதனை பாலக்கோடு நகரில் உள்ள மளிகை மற்றும் பெட்டி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
தர்மபுரி சாலையில் பயணியர் மாளிகைக்கு எதிரே உள்ள பீடா கடையில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் (600 கிராம்) கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, பாலக்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோகுல், கடை உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிந்தார்.
தகவல் அடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மருத்துவர் பானு சுஜாதா உத்தரவின் பேரில்:
-
கடை 15 நாட்களுக்கு மூடப்பட்டது
-
உடனடி அபராதமாக ₹25,000 வசூலிக்கப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் காவல்துறையோ அல்லது உணவு பாதுகாப்பு துறையோடு பகிரலாம். தொடர்பு எண்: 94440 42322 (SMS / WhatsApp வசதி). இதைத் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசுரங்களும் ஒட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக