பென்னாகரம், ஏப்.30–
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாணாரப்பட்டி கிராமத்தில் உள்ள பழமையான சக்திமிகுந்த மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் தீமிதி திருவிழா இந்தாண்டும் பக்தி பூர்வமாக நடைபெற்றது.
சோளிகவுண்டனூர், பூதநாயக்கன்பட்டி, ஆலாமரத்தூர், ரோனிப்பட்டி, சாணாரப்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களுக்கும் சொந்தமான இந்த கோயிலில், 15 நாட்கள் அம்மனை கொழுவில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வாக, ஐந்தூர் மக்களும் கலந்து கொண்டு, நாகாவதி ஆற்றிலிருந்து சக்தி அழைத்து பூகரகம் மற்றும் அக்னி கரகம் எடுத்துச் சென்றனர். பின்னர் வானவேடிக்கைகள் மற்றும் மேல்தாள இசையுடன், 32 அடி நீள அக்னிக் குண்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேற்றி கடன்களை செலுத்தினர்.
பின், அக்னிக்குண்டத்தில் மிளகு உப்பு கலவை தெளிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக