பாலக்கோடு, ஏப்ரல் 28:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும் போது பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லும் முறைசார்ந்த பாதை இல்லாததால், தனியார் சொந்தமான வயல்வெளிகள் மற்றும் வரப்புகளின் வழியாக ஒத்தை அடி பாதையில் சடலங்களை எடுத்துச் செல்லும் துயரமான நிலை தொடர்கிறது. மேலும், வயல்வெளிகளில் விஷ ஜந்துக்கள் அதிகமாக காணப்படுவதால், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும் மக்கள் நடந்து செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது பலருக்கு பெரும் சிரமத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, சுடுகாட்டிற்குச் செல்ல தனிக்குப் பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோதிஹள்ளி கிராம பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக