தர்மபுரி, ஏப்.30 –
தர்மபுரி நெல்லி நகர் ரெயில் நிலையம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழா, கம்பம் நடுதல் மற்றும் கொடியேற்ற நிகழ்வுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.
விழாவின் தொடக்க நாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, உச்சிக்கால பூஜை, சர்வ அலங்காரம், மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக வருகைதந்து அம்மனை தரிசித்து அருளைப் பெற்றனர். பக்தர்களுக்காக சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் தொடர்ச்சியாக:
-
மே 5: மகாலிங்கேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் மற்றும் 108 திருவிளக்கு பூஜை
-
மே 6: அம்மனுக்கு கூழ் ஊற்றுதல்
-
மே 7: சக்தி கரகம் எடுத்தல், பால்குட ஊர்வலம் மற்றும் வானவேடிக்கை
-
மே 8: அம்மன் திருவீதி உலா மற்றும் ஊஞ்சல் உற்சவம்
விழாவை சிறப்பிக்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக