அரூர், ஏப்.29 –
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், திமுக மாநில ஆதிதிராவிடர் நலக் குழு துணைச் செயலாளர் சா. ராஜேந்திரன், கவிஞர் கண்ணிமை, பகுத்தறிவாளர் கழக மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாவட்ட மகளிர் அணி தலைவர் மணிமேகலை, பாசறை தலைவர் கல்பனா, ஆசிரியர்கள் அசோகன், சின்னக்கண்ணன், கவிஞர் குறிஞ்சி சீதாராமன், பேரூராட்சி துணைத் தலைவர் சூரிய தனபால், திமுக நகர கழக செயலாளர் முல்லை இரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்தனர்.
மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நூல்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார். திமுகவினர் விண்ணரசு, பாடகர் மணி, கவுன்சிலர் உமா, முருகன் மற்றும் திராவிடர் கழகத் தலைமையினரான வழக்கறிஞர் வடிவேலன், ஒன்றிய தலைவர் குமரேசன், செயலாளர் பச்சையப்பன், மாணவர் அணி பிரதாப், கவிஞர் நொச்சி பூந்தளிரன், பிரேம் குமார், ராம்கி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக