வெள்ளிசந்தை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

வெள்ளிசந்தை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிசந்தை துணை மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில்  சிறப்பு குறை தீர்ப்பு  முகாம் மாவட்ட மின்பகிர்மான கழக  மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமையில் நடந்தது. செயற்பொறியாளர் வனிதா, உதவி செயற்பொறியாளர்கள் மோகன்குமார், அருன்பிரசாத், முனிராஜ், சங்கர், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இம்முகாமில்  மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல், இலவச மின்சாரம்  உள்ளிட்ட மின்சாரம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 80 மனுக்கள் பெறப்பட்டது, இதில் 73 மனுக்கள் உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, இலவச மின்சாரம் குறித்து வழங்கப்பட்ட 7 மனுக்கள் குறித்து விபரம் தெரிவிக்கப்பட்டது.


இம்முகாமில் பாலக்கோடு, காரிமங்கலம், அனுமந்தபுரம், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, பிக்கிலி, அமானி மல்லாபுரம் பாப்பாரப்பட்டி,  மாரண்டஅள்ளி, வெள்ளிசந்தை, பஞ்சப்பள்ளி, மகேந்திர மங்கலம், ஜிட்டாண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், கனவனஅள்ளி மற்றும் பாலக்கோடு கோட்டத்திற்க்குட்பட்ட   சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள்,  மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இம்முகாமில் மின்வாரிய உதவி பொறியாளர்கள் அருணகிரி, சேகர், விஜயகுமார், ரமேஷ், மாதேஷ், வெங்கடேஷ், திவாகர், சத்யா மற்றும் பணியாளர்கள் என திரளானோர்  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad