பாலக்கோடு, ஏப்ரல் 29:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஒன்னப்பகவுண்டனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிட்லகாரம்பட்டி கிராமத்தில், கோவை மாவட்ட வாணவராயர் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் அவிநாஷ், கணேஷ், முரளி, ஜீவானந்தம், கிருபாசங்கர், நவீன்குமார், ராகவேந்தர், ரோஹித் மற்றும் சுரேஷ்கிருஷ்ணா, விக்ரம் ஆகியோர் தங்கல் திட்டத்தின் கீழ் கிராமப்புற மதிப்பீடு நிகழ்த்தி வருகின்றனர்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் சிட்லகாரம்பட்டி கிராமத்தில் வண்ணக் கோலங்களால் ஊரின் சிறப்புகளை அழகாக உருவாக்கி, அந்த ஊர் மக்களின் பாரம்பரிய பண்பாட்டையும், சமூக ஒற்றுமையையும் கண்காட்சிப்படுத்தினர். இந்த முயற்சி ஊர்மக்களிடையே நல்ல பந்தத்தை ஏற்படுத்துவதற்கும், அந்தந்த கிராமங்களின் தனித்துவங்களை அறிய ஊக்கமளிக்கவும் பெரிதும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். முற்கால சிறப்புகளை மீட்டெடுத்து, புதிய தலைமுறைக்கு புரியவைக்கும் இந்த முயற்சி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக