பாலக்கோடு, ஏப்ரல் 28:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மல்லுப்பட்டியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 4-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ மூகாம்பிகை, ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கோவிந்தராஜீ அவர்கள் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் ரகுநாதன் ஆண்டறிக்கையை வாசித்து, கல்வி முன்னேற்றங்களை விளக்கினார். -முனைவர் உமாதேவராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, அவர்களது எதிர்கால வளர்ச்சிக்கான ஊக்க உரை வழங்கினார். இவ்விழாவில் 525 இளங்கலை மாணவிகளுக்கும், 76 முதுகலை மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் தொழிலதிபர் ஹரிஹரகோபால், மருத்துவர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளை வாழ்த்தினர். துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நன்றி உரையாற்றினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை ப்ரித்விராஜ் தலைமையில் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக