பாலக்கோடு, ஏப்ரல் 29:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் ஜிட்டாணள்ளி ஊராட்சியில், சின்னதப்பை கால்வாய் குறுக்கே ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் எம்.வீ.டி. கோபால் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் பஞ்சப்பள்ளி அன்பழகன், முனியப்பன், சண்முகம் மற்றும் மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சின்னதப்பை கால்வாய் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் எழுப்பிய நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு ரூ.21 இலட்சம் நிதியை ஒதுக்கியது. இதன் பேரில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வக்கீல் ஆ. மணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கட்சி பொறுப்பாளர்கள் இராஜபாட் ரங்கதுரை, சக்தி, முனிராஜ், பாக்கியராஜ், யுவராஜ், சிவாஜி, முனிரத்தினம், சண்முகம், அம்மாசி, எல்லப்பன், குமார், ஒன்றிய இளைஞரணி சிதம்பரம், ஜேடி விங் வினோத்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக