பெரியார் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் சிறப்பு கருத்தரங்கு.
"தமிழ் கவிதைகளும் ஆங்கிலக் கவிதைகளும் – இரு ஆன்மாக்களின் எதிரொலி" என்ற தலைப்பில் கவிதை இலக்கியப் பயணம்.
தர்மபுரி மாவட்டம் பைசுஹள்ளியில் இயங்கும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் சார்பில், ஒரு சிறப்பு கருத்தரங்கு சமீபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியரான முனைவர் நடராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். "தமிழ் கவிதைகளும் ஆங்கிலக் கவிதைகளும் இரு ஆன்மாக்களின் எதிரொலி" என்ற முக்கியமான தலைப்பில் அவர் ஆழமான மற்றும் ஈர்க்கும் வகையிலான உரையாற்றினார்.
உரையில் அவர், இலக்கியம் என்பது மொழிக்குப் புறம்பான ஒரு ஆழமான உணர்வுத் தளமாக இருப்பதாக விளக்கியதுடன், மாணவர்கள் படித்து ரசிப்பதோடு மட்டுமல்லாமல், தாமாகவே படைக்கத் தொடங்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். மாணவர்கள் தங்கள் தாய் மொழியிலோ அல்லது ஆங்கில மொழியிலோ கவிதை, சிறுகதை, குறுநாடகங்கள் போன்ற படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், இதுவே அவர்களின் அகச்சிந்தனையை வெளிப்படுத்தும் சிறந்த வாயிலாக அமையும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்வின் ஆரம்பத்தில், ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றி, நிகழ்வின் முக்கியத்துவத்தை விளக்கியார். தொடர்ந்து ஆங்கிலத் துறை தலைவர் மற்றும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜ் துவக்க உரையாற்றினார். உதவி பேராசிரியை கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வின் வரவேற்புரை முதலாம் ஆண்டு மாணவர் பாலச்சந்தர், நன்றி உரையை மாணவி மோனிகா வழங்கினர். நிகழ்வை மாணவி கலைமதி தொகுத்து வழிநடத்தினார்.
இந்த சிறப்பு கருத்தரங்கிற்கு கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர். மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. இவ்வகை நிகழ்வுகள், மாணவர்களின் இலக்கிய உணர்வை தூண்டும் பக்கமாகவும், அவர்களின் சொற்பொழிவு, எழுத்துத் திறன்களை வளர்க்கும் வாயிலாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக