Type Here to Get Search Results !

தருமபுரியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.


தருமபுரி, 27 ஏப்ரல் 2025: 

தருமபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி A.R. திருமண மண்டபத்தில் இன்று (27.04.2025) நடைபெற்ற தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்களின் அடிப்படையில், வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இணைந்து நடத்திய பட்டா மாறுதல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


வீட்டு மனைகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து கிரயம் பெற்ற உரிமையாளர்கள், இதுவரை பெயர் மாற்றம் செய்யாமல் இருந்த நிலையில், அவர்களுக்கு பட்டா வழங்குவதற்காக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முகாமில் சுமார் 240-க்கும் மேற்பட்ட கிரய உரிமையாளர்கள், தங்களுடைய கிரய பத்திரம், வில்லங்க சான்று மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் பங்கேற்று, பட்டா மாற்றம் பெற மனு அளித்தனர்.


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முகாமின் ஏற்பாடுகளையும், பயனாளிகள் சமர்ப்பித்த ஆவணங்களையும் நேரில் பரிசீலித்து, ஆவணங்கள் சரியாக இருந்தால் அரசின் விதிமுறைகளின் படி விரைந்து பட்டா வழங்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இதனைத் தொடர்ந்து, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிகிச்சை முறைகள், அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் பற்றியும் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களிடமிருந்து நேரில் கேட்டறிந்தார்.


தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஓசூர் பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் திரு. கே. பாண்டியராஜ், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) மரு. சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவர் மரு. நாகேந்திரன், உதவிப் பொறியாளர் திரு. ஜி. முகுந்தன், வட்டாட்சியர் திரு. சண்முகசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies