தருமபுரி ஏப். 28:
தருமபுரி மாவட்டம் கொலசனஅள்ளி நெடுஞ்சாலையில், சொகுசு காரில் கடத்தப்பட்ட ரூ.2 இலட்சம் மதிப்பிலான 156 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மனோகரன், டி.எஸ்.பி., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் திரு. சுப்ரமணியம் தலைமையில் போலீசார் கொலசனஅள்ளி நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். சோதனைக்காக நிறுத்திய சொகுசு காரில் ஹான்ஸ், தூலிப் போன்ற பிராண்டுகளின் குட்கா பொருட்கள் ரூ.2 இலட்சம் மதிப்பில், மொத்தம் 156 கிலோ அளவில் கடத்தப்படுவதை கண்டறிந்தனர்.
விசாரணையில், டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கொத்தபள்ளியைச் சேர்ந்த சிராஜ் (25) என்றும், உடன் பயணித்தவர் கர்நாடக மாநிலம் சிக்ககொல்லர அட்டி கிராமத்தைச் சேர்ந்த திலக்குமார் (24) என்றும் தெரியவந்தது. இருவரும் பெங்களூரிலிருந்து ஈரோட்டை நோக்கி குட்கா பொருட்கள் கடத்திச் சென்றது உறுதி செய்யப்பட்டது.
போலீசார், ரூ.5 இலட்சம் மதிப்பிலான சொகுசு காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக