தர்மபுரி, ஏப்ரல் 28:
ஆனால், சில நாட்கள் தங்கிய பிறகு, இளைய மகன் கோவிந்தராஜ், கடந்த மாதம், மூதாட்டியை பொட்டியும் படுக்கையுடன் ஆட்டோவில் பூத்துப்பட்டி கிராம சாலையின் ஓரத்தில் இரவு நேரத்தில் இறக்கி விட்டுச் சென்றார். இரவு முழுவதும் அலறி துடித்த மூதாட்டியை மறுநாள் காலை அவ்வழி வந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன் மீட்டார். அவர் கடந்த ஒரு மாதமாக மூதாட்டிக்கு அடைக்கலம் அளித்து, உணவு வழங்கி வந்துள்ளார்.
பிள்ளைகளின் அன்பை விரும்பிய பாப்பாத்தியம்மாளின் வேண்டுகோளை ஏற்று, ஊர் பொதுமக்கள் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கிஷோர், மாவட்ட தலைவர் கோபிநாதன் மற்றும் கழக நிர்வாகிகள், மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
எனினும், காவல்துறையினர் ஒரு மாதமாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை வெள்ளிச்சந்தை நான்கு ரோடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் உரிமை அமைப்பினர் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர், மூதாட்டியை பிள்ளைகளுடன் சேர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் அமைப்பினர் தர்ணாவை முடித்தனர். பெற்ற தாயை நடுரோட்டில் விட்டுச்சென்ற மகன்களின் செயல்முறை, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

