Type Here to Get Search Results !

யானை கொலை வழக்கு தொடர்புடைய செந்தில் மர்ம மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.

தர்மபுரி, ஏப்ரல் 7:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் எரியூர் காவல் எல்லைக்குட்பட்ட நெருப்பூர் வனப்பகுதியில் கடந்த மார்ச் 1ஆம் தேதி சிதைந்த நிலையில் கருகிய யானை சடலம் கண்டெடுக்கப்பட்டது. தந்தங்களைப் பறிக்க வனவிலங்கு வேட்டைக்காரர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக கொங்கரபட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (28) என்பவரை மார்ச் 17ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கைவிலங்குகளுடன் செந்தில் காட்டுக்குள் தப்பிச் சென்றதாக வனத்துறை தகவல் வெளியிட்டது. இதே வழக்கில் மற்ற நான்கு சந்தேக நபர்களும் மார்ச் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். வனத்துறையினர் அளித்த புகாரின் பேரில், ஏரியூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 45/2025 என வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இதையடுத்து, ஏப்ரல் 3ஆம் தேதி கொங்கரபட்டி அருகே சரக்காடு வனப்பகுதியில் ஆண் சடலம் காணப்பட்டது. இதற்கமைய, ஏப்ரல் 4ஆம் தேதி குற்ற எண் 55/2025 என ஏரியூர் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, சடலம் செந்திலுக்கே உரியது என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டினர். செந்திலின் மரணம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் இருப்பதாகவும், அது குறித்து விசாரணை தேவை எனவும் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.


இந்நிலையில், சம்பவத்தின் தீவிர தன்மை மற்றும் மர்மம் அதிகரித்துள்ளதால், யானை கொலை வழக்கும், செந்தில் மரணம் வழக்கும் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பான உண்மை நிலை எப்போது வெளிவரும் என்பது தற்போதைய பரபரப்பான கேள்வியாக மாவட்டம் முழுவதும் எழுந்துள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884