Type Here to Get Search Results !

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தருமபுரி மாவட்டத்தில் ஏப்ரல் 10ல் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர்.


தருமபுரி, ஏப்.8:

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள், தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக, இன்று (ஏப்ரல் 8) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர்.கவிதா, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. சின்னுசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு. ஜெயதேவ்ராஜ், கூட்டுறவு வங்கி மேலாளர் திருமதி மலர்விழி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


முக்கிய நிகழ்வுகளாக:

🔹 தருமபுரி பேருந்து நிலையத்தில் – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம் லிட்), தருமபுரி மண்டலம் சார்பில், புதிய வழித்தட மாற்றம் மற்றும் நீட்டிப்பு செய்யப்பட்ட பேருந்து சேவை தொடக்க நிகழ்ச்சி நடைபெறும்.


🔹 அரூர் மற்றும் கோட்டப்பட்டி பகுதியில் – வருவாய், கூட்டுறவு, மகளிர் திட்டம், வேளாண்மை, ஆதிதிராவிடர் நலத்துறை, தொழில்மையம், கால்நடை பராமரிப்பு, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.


🔹 செல்லம்பட்டியில் – தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பயிற்சி நிலைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்.


🔹 பஞ்சப்பள்ளி அணைக்கட்டு பகுதியில் – நீர்வளத்துறை சார்பில் மேல்பெண்ணையாறு வடிநில கோட்டத்தின் கீழ், ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் பஞ்சப்பள்ளி மற்றும் இராஜப்பாளையம் அணைக்கட்டுகள் வெள்ள பாதிப்பு புனரமைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்.


இந்த நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். தருமபுரி மாவட்ட மக்கள் நலன் கருதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies