தருமபுரியில் SDAT-ஸ்டார் இறகுபந்து அகாடமிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு – மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

தருமபுரியில் SDAT-ஸ்டார் இறகுபந்து அகாடமிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு – மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு.


தமிழ்நாட்டை விளையாட்டு முன்னோடியாக மாற்றும் முயற்சியில், அனைத்து மாவட்டங்களிலும் "STAR (Sports Talent Advancement & Recognition)" என்ற உயர்தர விளையாட்டு திறன் மேம்பாட்டு மற்றும் அங்கீகார மையம் உருவாக்கப்பட உள்ளது.


இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் SDAT-ஸ்டார் இறகுபந்து அகாடமிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு வரும் 28.04.2025 காலை 8.00 மணி அளவில் மாவட்ட விளையாட்டு அரங்கம், தருமபுரியில் நடைபெற உள்ளது.


வயது வரம்பு: 12 முதல் 21 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

பதிவு செய்திகளாக: பள்ளித்தலைமையாசிரியரிடமிருந்து பெறப்பட்ட படிப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் கட்டாயம் கொண்டு வரவேண்டும்.


தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் 20 வீரர் மற்றும் 20 வீராங்கனைகளுக்கு:

  • காலை நேர உணவாக முட்டை, லெமன் ஜூஸ்

  • மாலையில் சுண்டல், பால், பழங்கள் வழங்கப்படும்
    (நபர் ஒன்றுக்கு ரூ.25 மதிப்பில் நாள் ஒன்றுக்கு)


இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கூறியதாவது: “விளையாட்டு வீரர்களின் திறனை மேலெழுப்ப, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியில் பயிற்சி, அங்கீகாரம், ஊக்குவிப்பு வழங்கும் வகையில் இந்த மையங்கள் தொடங்கப்படுகின்றன. இவ்வாய்ப்பை மாவட்டத்திலுள்ள இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad