பென்னாகரம், ஏப்ரல் 12:
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, அதை திரும்ப பெறக் கோரியும், இஸ்லாமியர்களின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், பென்னாகரம் சுன்னத் ஜமாத் ஜாமியா மஸ்ஜித் முன்பு இஸ்லாமியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, பென்னாகரம் நகரம் முழுவதும் இஸ்லாமியர்கள் சார்ந்த கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. மதிய தொழுகையின் பின், மஸ்ஜித் முன்பு ஒன்று கூடிய இஸ்லாமியர்கள், “கருத்து பேட்ச்” அணிந்து, மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், சிறுபான்மையருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எதிர்த்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்நிகழ்வில் மஸ்ஜித் முத்தவல்லி தெளலத்பாஷா, முஸ்தபா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கலைசெல்வம் உள்ளிட்ட முக்கியக் கண்ணியர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு இஸ்லாமியர்கள் கூட்டமைப்புகளின் நிர்வாகிகளும் இதில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், வக்பு மசோதா மீதான கவலையையும், சமூக நீதி குறித்த பரப்புரையையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக