ஆடு திருடியதாக புகார்: பொதுமக்கள் தாக்கிய சம்பவம் – தருமபுரி காவல்துறையிலிருந்து விளக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

ஆடு திருடியதாக புகார்: பொதுமக்கள் தாக்கிய சம்பவம் – தருமபுரி காவல்துறையிலிருந்து விளக்கம்.


தருமபுரி, ஏப்.29 –

தருமபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்பூரிக்கல் கிராமத்தில் இன்று (29.04.2025) காலை 8.30 மணியளவில், ஆடு திருடியதாக கூறப்படும் இருவர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை விளக்கம் வழங்கியுள்ளது.

தொப்பூர் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் அருள்மணி மற்றும் சிதம்பரம் ஆகியோர் சந்தநூரான்கொட்டாய் கிராமத்தில் இருந்து ஒரு ஆட்டை திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, ஊர் பொதுமக்கள் விரட்டி சென்று அவர்களை பிடித்து தாக்கியதாக முகநூலில் செய்திகள் வெளியானது.


இது தொடர்பாக தகவல் கிடைத்ததும், தொப்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக அருள்மணி அளித்த புகாரின் அடிப்படையில் பொதுமக்கள் மீது தொப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆடு திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரிடமிருந்து, ஆடு உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையிலும் தனித் தகையிலான வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு வழக்குகளும் தொடர்பாக காவல்துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad