Type Here to Get Search Results !

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் மற்றும் ‘நான் முதல்வன்’ பயிற்சிக்கு இளைஞர்களை விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை.


தருமபுரி – ஏப். 7:

தருமபுரி மாவட்ட இளைஞர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு வாய்ப்பு காத்திருக்கிறது. பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம் மற்றும் ‘நான் முதல்வன்’ குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அறிவித்துள்ளார்.


இந்த திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 7 நிறுவனங்களில் 55 இளைஞர்களுக்கு 12 மாதங்கள் கொண்ட இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் http://www.pminternship.mca.gov.in/ என்ற இணையதளத்தில் ஏற்கப்படுகின்றன.


இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக்கூடிய வயது வரம்பு 21 முதல் 24 ஆண்டுகள் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக ITI, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி (BE, BA, BSc, B.Com உள்ளிட்டவை) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


இந்த பயிற்சி திட்டத்தில் பங்கேற்கும் பயிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 உதவித் தொகையாகவும், தற்செயலான செலவுகளுக்காக ஒருமுறை ரூ.6000 கூடுதலாக வழங்கப்படும். மேலும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நடக்கும் குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 15, 2025 ஆகும். மேலும் தகவலுக்கு மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களை அணுகலாம். தொடர்புக்கு: 9499937454, 04342-288890, 9442286874 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என, மாவட்ட ஆட்சியர் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies