Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே பேளாரஅள்ளியில் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா - பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு.


பாலக்கோடு, ஏப்.12-

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


அதனை தொடர்ந்து, குத்துவிளக்கு பூஜை, வள்ளி தெய்வானை திருமணம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, இன்று காலை பாலக்கோடு ஸ்ரீ திரெளபதியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், கரகம் எடுத்தும், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், பாலக்கோடு நகர் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக நடந்து சென்று முருகன் கோயிலை அடைந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து, முருகபெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. வண்ண பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காட்டப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் பேளாரஅள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமாரியப்பன், மந்திரி கவுண்டர் சரவணன், தர்மகர்த்தா முருகன் மற்றும் பேளாரஅள்ளி, மல்லசமுத்திரம், எருமாம்பட்டி, செம்மநத்த கிராமத்தை சேர்ந்த ஊர்கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies