Type Here to Get Search Results !

பி.செட்டிஅள்ளி கிராமத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்.


பாலக்கோடு, ஏப்.11-

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பி.செட்டிஅள்ளி கிராமத்தில், சேலம் பீரீத்தம் மருத்துவமனை, ARDS தொண்டு நிறுவனம் மற்றும் தர்மபுரி மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் தலைவர், ஏ.ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குனரான ஆனந்தன் தலைமையில் முகாம் நடத்தப்பட்டது.


முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, கூட்டமைப்பின் துணை தலைவர் துரைமணி ஆகியோர் முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இம்முகாமில், மருத்துவர் தமிழ் அழகன், பாலசுப்பரமணி, சிங்காரவேல், மனோ ஆகிய மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனைகள், மூட்டு தேய்மானம், கை கால் வலி, முதுகு வலி, காது, மூக்கு, தொண்டை பிரச்சனை, இரத்த போக்கு, கர்பப்பை பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை, நுரையீரல் பரிசோதனை, சளி பரிசோதனை, கொலஸ்ட்ரால் அளவு, சிறுநீரகம், இருதயம் போன்ற பரிசோதனைகள் மேற்கொண்டு, குறைபாடு உடையவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டது.


மேலும், உயர்தர சிகிச்சை தேவைப்படும் பாதித்தவர்களுக்கு உரிய பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உடல் பரிசோதனைகள் செய்தனர். இம்முகாமை தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் சூர்யா, குமுதா கனிமொழி மற்றும் மற்ற குழுவினர் ஒருங்கிணைந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies