பாலக்கோடு, ஏப்ரல் 23:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பொதுமக்களின் வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் மக்கும், மக்காத மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை தனித்தனியாக பிரித்து செயல்படுத்தும் பணிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் மூலம் ரூ.10.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய டிராக்டரும் ட்ரைலரும் வாங்கப்பட்டுள்ளன.
இவ்வுட்பொருள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேரூராட்சி தலைவர் திரு. பி.கே.முரளி, செயல் அலுவலர் திருமதி இந்துமதியிடம் இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். இந்நிகழ்வில் வார்டு கவுன்சிலர் வாகப்ஜான், பேரூராட்சி அலுவலர்கள், மற்றும் தூய்மை காவலர்கள் பங்கேற்றனர். இந்த புதிய வசதி மூலம் நகரின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக