பாலக்கோட்டில் 3 ஸ்டார் மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா — மாநில தலைவர் சோமசுந்தரம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

பாலக்கோட்டில் 3 ஸ்டார் மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா — மாநில தலைவர் சோமசுந்தரம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.


பாலக்கோடு, ஏப்ரல் 29:

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் புதிய 3 ஸ்டார் மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு மொபைல் போன் வியாபாரிகள் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்க மாநில தலைவர் பி.ஆர். சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள 3 ஸ்டார் மொபைல் ஷோரூம் கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விழாவில் ஏராளமான வியாபாரிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.


ஷோரூம் உரிமையாளர்கள் அன்வர் ஷெரீப் மற்றும் அஸ்லம் ஷெரீப் கூறியதாவது:

  • அனைத்து மொபைல் போன்களும் 0% வட்டியில் மாத தவணை முறையில் வழங்கப்படும்.

  • சார்ஜர், ப்ளுடூத், யு.எஸ்.பி கேபிள், அடாப்டர், கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட மொபைல் தொடர்பான அனைத்து பாகுபொருட்களும் குறைந்த விலைக்கே கிடைக்கும்.

  • பஜாஜ், டிவிஎஸ் போன்ற முன்னணி நிதி நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய் செலுத்தி, 0% வட்டியில் மொபைல்கள் வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • அனைத்து மொபைல்களுக்கும் சிறந்த முறையில் சாப்ட்வேர் சேவைகள் செய்யப்படுவதுடன், வாட்டர் லாக் ஆன மொபைல்களும் சிறப்பாக சர்வீஸ் செய்யப்படும்.

மேலும், 3 ஸ்டார் மொபைல்ஸ் ஷோரூமின் கிளைகள் பாலக்கோடு பஸ் நிலையத்தில் இரண்டு இடங்களிலும், மாரண்ட அள்ளி பகுதியில் இரண்டு கிளைகளிலும் செயல்பட்டு வருகின்றன என தெரிவித்தனர். நிகழ்ச்சி நிறைவில் இணை நிறுவனர் அஸ்லம் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad