தருமபுரியில் “முத்தமிழே! குறளமுதே!” நூல் வெளியீடு; சட்ட மன்ற உறுப்பினர் SP. வெங்கடேசன் பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

தருமபுரியில் “முத்தமிழே! குறளமுதே!” நூல் வெளியீடு; சட்ட மன்ற உறுப்பினர் SP. வெங்கடேசன் பங்கேற்பு.


தருமபுரி, ஏப்ரல் 6 –

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த ஆசிரியையான திருமதி இரா. கலையரசி எழுதிய “முத்தமிழே! குறளமுதே!” என்ற நூல், இன்று தருமபுரி சந்திரா ஹாலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. சகாப்தம் பதிப்பகம் சார்பில் வெளியான இந்நூலில், திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கு புதுப்பொருள் விளக்கக் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் இலக்கிய பார்வைகள் அடங்கியுள்ளன.


தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வரும் கலையரசி, மே மாதத்தில் பணி நிறைவு பெற உள்ள நிலையில், ஆசிரியர் சமூகத்திற்கு ஓர் உன்னத நினைவாக நூலை வெளியிட்டுள்ளார். விழாவில் தருமபுரி MLA S.P. வெங்கடேசுவரன், எழுத்தாளர் முல்லையரசு, தேசிய விருது பெற்ற ஆசிரியர் ச.மாலதி, ஆசிரியர் பயிற்றுநர் குணசேகரன், மற்றும் பல எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.


பணி நிறைவு பெறும் நிலையிலும் எழுத்தில் ஈடுபட்டு நூலை வெளியிட்ட கலையரசி, “ஓய்வுக்கு பிறகும் சிந்தனை ஓயாத ஆசிரியரின் முன்மாதிரி” என பலராலும் பாராட்டப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad