தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது.37) விவசாயம் செய்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் 30 க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளது.
இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைப்பதில்லை, மேலும் பல வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும் இதுவரை வழங்கப்படவில்லை, இப்பகுதியில் உள்ள மினி டேங்க் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பழுதாகி செயல்பாட்டில் இல்லாததால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். எனவே திரெளபதி அம்மன் கோயில் பகுதியில் உள்ள மினி டேங்கலிருந்து இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க பெரியசாமி காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அளித்தார்.
மனு மீது ஒரு வார காலம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இது குறித்து பெரியசாமி மாவட்ட ஆட்சியருக்கு 1077 ல் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சாயத்து கிளர்க் மற்றும் அடியாட்களுடன் சென்று கலெக்டரிடம் ஏன் புகார் அளித்தாய் என மிரட்டியதுடன் சாதி பெயரை சொல்லி அசிங்கமாக பேசி உள்ளார்.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலரின் அடியாட்கள் சிலர் போன் செய்து பெரியசாமியை மிரட்டி வருவதாகவும் என் உயிருக்கு எதுவும் நேர்ந்தால் வட்டார வளர்ச்சி அலுவலர், பஞ்சாயத்து கிளார்க் தான் காரணம் என பெரியசாமி கூறி உள்ளார்.
குடிதண்ணீர் வரவில்லை என மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்த விவசாயிக்கு அதிகாரி சாதி பெயரை கூறி இழிவுபடுத்தி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக